19 July 2023 11:27 AM GMT
#36449
எரியாத மின் விளக்கு
தா.பழூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள சுத்தமல்லி பிரிவு சாலையில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த உயர்மின் கோபுர விளக்குகள் பழுதடைந்து கடந்த ஒரு வாரமாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.