2 July 2023 4:27 PM GMT
#35508
மின்விளக்கு அமைக்கப்படுமா ?
இரும்பாலை
தெரிவித்தவர்: அருண்குமார்
சேலம் இரும்பாலை 1-வது கேட் கணபதிபாளையத்தில் இருந்து சர்க்கார் கொல்லப்பட்டி வரை சாலையில் போதுமான மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?