23 April 2023 2:30 PM GMT
#31369
அடிக்கடி மின்தடை
காட்டூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் காட்டூர் மேற்கு மற்றும் அகரதிருநல்லூர் பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஏற்படும் மின்தடை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.