19 March 2023 5:04 PM GMT
#29353
மின்விளக்குகள் அமைக்கப்படுமா?
Tharamangalam
தெரிவித்தவர்: சுசீலா – சமூக சேவகி
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாச்சலம் புதூர் பகுதியில் 100 குடும்பத்திற்கு மேலானோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் உள்ள மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரும் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?