26 Feb 2023 3:24 PM GMT
#28004
தெருவிளக்கு எரியுமா?
பெரியகுளம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரியகுளம் தென்கரை சுதந்திர வீதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பெண்கள், முதியோர்கள் இரவு நேரம் அந்த பகுதியில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெருவிளக்கை சீரமைக்க வேண்டும்.