27 Nov 2022 10:48 AM GMT
#22427
ஆபத்தான மின்கம்பம்
மணல்மேடு
தெரிவித்தவர்: Palvannan
மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியில் உள்ள கடைவீதியில் உள்ள சாலையோரத்தில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பம் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?