23 Nov 2022 10:00 AM GMT
#22129
மின்கம்பத்தை சூழ்ந்த செடி, கொடிகள்
கீழ்புத்துப்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள மின்கம்பத்தை சூழ்ந்து செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இந்நிலையில் மின்கம்பிகளில் செடி, கொடிகள் உரசுவதால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் கீழ்புத்துப்பட்டு கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பதை சூழ்ந்து நிற்கும் செடி, கொடிகளை அதற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.