6 Nov 2022 7:24 PM GMT
#21170
கழிவுநீர் கால்வாயில் அமைந்துள்ள மின்கம்பம்
திண்டிவனம்
தெரிவித்தவர்: சக்திவேல்
திண்டிவனம் 18-வது வார்டு தொப்பழயன் தெருவில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் மின்கம்பம் அமைந்துள்ளது. மின்கம்பத்தை தாங்கி பிடிக்கும் சிமெண்டு பூச்சுகள் தற்போது சேதமடைந்து காணப்படுவதால், எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. குடியிருப்பு பகுதியில் மின்கம்பம் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் ஏதும் நிகழும் முன் மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.