23 Oct 2022 4:14 PM GMT
#20229
மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?
மேச்சேரி
தெரிவித்தவர்: சி.துரை
சேலம் மாவட்டம் மேச்சேரியில் பல முக்கிய இடங்களில் மின்விளக்கு இல்லாமலும் மற்றும் பழுதடைந்தும் காணப்படுகிறது, இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. முக்கிய இடமான பஸ் நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டூர் சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் சாலை, பத்ரகாளியம்மன் கோவில் வளைவு பகுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற இடங்களில் மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து உள்ளது. எனவே இந்த இடங்களில், மின் விளக்கு வசதி ஏற்படுத்தியும், பழுதடைந்த மின் விளக்கை சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.