- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின் இணைப்பு மாற்றப்படுமா?
கரூர் மாவட்டம், நடையனூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் பின்புறம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டு அதில் மின் கம்பி பொருத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மின் கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மின் கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்து பழைய கம்பத்தின் அருகே புதிய மின் கம்பம் நடப்பட்டது. புதிய மின்கம்பம் நடப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் பழைய மின்கம்பத்தில் உள்ள மின் கம்பியை புதிய மின் கம்பத்தில் பொருத்தவில்லை. இதனால் கம்பி மட்டுமே தெரியக்கூடிய மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழும் சூழ்நிலையில் உள்ளது. மின் கம்பியின் வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே மின்கம்பம் முடிந்து விழுந்தால் பெரிய ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகளை புதிய மின்கம்பத்திற்கு மாற்றி விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





