திருப்பூர்-அவினாசி சாலையில் புஷ்பா பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். தொடா்ந்து தேவாங்கபுரம் அரசு பள்ளி முன்பு குடிநீர் செல்வதால் பள்ளி மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீர் அதிக அளவில் வீணாவதால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் சீராக கிடைப்பதில்லை. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.