சாலையை ஆக்கிரமிக்கும் கருவேல மரங்கள்

Update: 2024-05-12 14:03 GMT
  • whatsapp icon

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் இருந்து பெருமருதூர் செல்லும் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் மற்றும் முற்கள் அதிக அளவில் முளைத்து காணப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்லும்போது, சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் கருவேல முற்களில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் முளைத்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 


மேலும் செய்திகள்