16 April 2023 4:13 PM GMT
#30989
சாலையோரம் மண் அணைக்க வேண்டும்
கத்தாழம்பட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கண்ணமங்கலம் அருகே கத்தாழம்பட்டு கிராமத்தில் லட்சுமிபுரம் முதல் நஞ்சுகொண்டாபுரம் கிராமம் வரை தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. தார் சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்று ஒரு மாதத்துக்கும்மேல் ஆகிறது. தரை மட்டத்தில் இருந்து தார் சாலை உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், சாலை ஓரம் பெரிய அளவில் பள்ளமாக உள்ளது. எதிர் எதிரே வாகனங்கள் மாறி செல்லும்போது சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. மோட்டார்சைக்கிளில் செல்வோர் ஒதுங்கி போகும்போது என்ஜின் அடிபடுகிறது. விபத்துகள் நடக்கிறது. எனவே சாலையோரம் மண் அணைக்க வேண்டும்.
-கந்தவேல், கண்ணமங்கலம்.