23 March 2025 12:17 PM GMT
#54728
குண்டும், குழியுமான சாலை
கம்பன் நகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் கம்பன் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பல சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் தவறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், மழை பெய்தால் சாலை சேறும், சகதியுமாக மாறுகிறது. இதனால் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.