2 Jun 2024 10:38 AM GMT
#47101
தார்சாலை வேண்டும்
கூடலூர்
தெரிவித்தவர்: Mr.V.Ramachandran
பந்தலூர் தாலுகா புஞ்சைவயல் அருகே ஒளிமடா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் தார்சாலை வசதி இல்லை. வெறும் மண் சாலையே உள்ளது. அதுவும் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு தார்சாலை அமைத்து தர வேண்டும்.