3 Dec 2023 4:52 PM GMT
#42644
சுகாதார சீர்கேடு
சீக்குபட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மதுரை சீக்குபட்டி மஞ்சம்பட்டி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் பல நாட்களாக தேங்கியிள்ள மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே நோய் பரவாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீரை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.