- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வழிகாட்டி பலகைகள் பொருத்தப்படுமா?
பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆலத்தூர் கேட். பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆலத்தூர் கேட்டில் இருந்து மேற்கு திசையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், செட்டிகுளம் பத்திரப்பதிவு அலுவலகம், செட்டிகுளம் மாவட்ட முக்கியசாலை, எம்.டி.ஆர். 1120 மாவிலங்கை, தேனூர் வழியாக புத்தனாம்பட்டி செல்லும் சாலை செல்கிறது. சாலை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து செட்டிகுளம் மாவிலங்கை ஆகிய இடங்களில் வழிகாட்டி பலகைகள் இல்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான மாணவ- மாணவிகள் குறைந்த தொலைவில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் படிப்பதற்காக திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் நேரு நினைவு கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள். ஆலத்தூர் கேட் பகுதியில் இருந்து செட்டிகுளம் 8 கிலோ மீட்டர், புத்தனாம்பட்டி 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. செட்டிகுளம் கடைவீதியில் இருந்து புத்தனாம்பட்டி 14 கிலோ மீட்டர், தேனூர் 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆலத்தூர் கேட் பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் ஊர் பெயர்கள் குறித்த தகவல்கள் பலகை இல்லை. எனவே பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினர் ஆலத்தூர் கேட் பகுதியிலும் செட்டிகுளம் கடைவீதி பகுதியிலும், புத்தனாம்பட்டி குறித்த வழிகாட்டி பலகைகள் வைத்துக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.