16 July 2022 1:28 PM GMT
#2065
விபத்து ஏற்படும் அபாயம்
தெற்கு வாழவல்லான்
தெரிவித்தவர்: மாரிலிங்கம்
ஏரல்-முக்காணி நெடுஞ்சாலையில் வாழவல்லானில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேல்புறம் ஆபத்தான வளைவு சம்பந்தமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. தற்போது வீசிவரும் பலத்த காற்றால் எச்சரிக்கை பலகை சாலையில் சாய்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த எச்சரிக்கை பலகையை சீராக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?