27 Sep 2022 11:22 AM GMT
#17546
தொடரும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பரங்கிப்பேட்டை
தெரிவித்தவர்: கலீல் பாகவீ
பரங்கிப்பேட்டை அருகே அகரம் ரெயிலடி- முட்லூர் நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் எந்த இடத்திலும் வேகத்தடை, விபத்து எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் ஏதும் இல்லை. இரவு நேரங்களில் வெளிச்சம் காட்ட ஒரு தெரு விளக்குக்கூட இல்லை. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடைகள், விபத்து எச்சரிக்கை பலகைகள், ஒளிரும் விளக்குகள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.