25 Sep 2022 5:24 PM GMT
#17286
புகார் பெட்டி செய்தி எதிரொலி
Kovilampoondi
தெரிவித்தவர்: சிதம்பரம் பொதுமக்கள்
கோவிலாம்பூண்டி கொடிப்பள்ளம் இடையே உள்ள பாலம் பலத்த சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதை தொடர்ந்து அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை உடனடியாக சீரமைத்து நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.