4 Jun 2023 3:40 PM GMT
#33887
பார்த்தீனிய செடிகள் அகற்றப்படுமா?
தர்மபுரி
தெரிவித்தவர்: Sivashanmugam
தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் ராமாக்காள் ஏரிக்கரையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்காகவும், சுற்றி பார்ப்பதற்காகவும் நடைமேடையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டது. இந்த ஏரிக்கரை பூங்காவில் பார்த்தீனிய செடிகள் அடர்ந்து வளர தொடங்கி உள்ளன. இதனால் இந்த பகுதியில் சுகாதாரம் மீண்டும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு அடர்த்தியாக வளர்ந்து வரும் பார்த்தீனிய செடிகளை அகற்ற வேண்டும். இந்த பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.