- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தூர்வாரப்படாத வடிகால்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் பொன்னாற்று பாசத்தின் மூலமாக சுமார் 5,000 ஹெக்டர் நிலப்பரப்பில் நஞ்சை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. பொன்னாற்றில் இருந்து 1, 2, 3, 4-ம் எண் பாசன வாய்க்கால்கள் மூலம் இப்பகுதி விவசாயிகள் பாசனம் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். அதேபோல் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் வடிவதற்கு வெட்டாறு வடிகால் ஓடை மட்டுமே உள்ளது. இந்த வடிகால் ஓடை அடிக்காமலை பகுதியில் தொடங்கி கோடாலி கருப்பூர் பகுதியில் உள்ள 7 கண் மதகு வரை அமைந்துள்ளது. இதில் பல்வேறு இடங்களில் புதர் மண்டி கிடைக்கிறது. இதனால் இப்பகுதியில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும், மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் சம்பா பருவத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தி நஷ்டப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. பருவம் தவறிய மழை ஏற்பட்டால் வரும் டிசம்பர் மாதங்களில் கூட நெல் வயல்கள் வடிகால் வசதி இல்லாமல் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே வடிகால் ஓடையை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.