- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மது, கஞ்சா விற்பனை தடுக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதால் எப்போதும் மது பிரியர்களின் கூட்டம் அங்கு அதிக அளவில் சென்று வருகிறது. இதனால் அப்பகுதி வழியே தங்கள் வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெண்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்டோர் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், கஞ்சா குடித்துவிட்டு கும்மாளம் போடும் இளைஞர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கஞ்சா குடித்த இளைஞர்கள் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று அவர்களுக்கே தெரியாது நிலையில் வீண் விவாதம் மற்றும் தேவையற்ற சண்டைகள் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும், குறுகிய காலத்தில் பணக்காரர்கள் ஆகலாம் என்ற கூலித்தொழிலாளர்களின் பேராசையால் லாட்டரி விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும் இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.