12 May 2024 12:05 PM GMT
#46576
சுடுகாடு ஆக்கிரமிப்பு
இரும்புலிகுறிச்சி
தெரிவித்தவர்: லோகேஸ்வரன்
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம், இரும்புலிகுறிச்சி போலீஸ் நிலையத்திற்கு அருகே ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை யாருடைய அனுமதியும் இல்லாமல் வெளியூரை சார்ந்த சிலர் ஆக்கிரமித்து கறி கடை நடத்தி வருகின்றனர். இதனால் எங்கள் சுடுகாடு சுகாதாரமற்ற முறையில் உள்ளது. சுடுகாட்டுக்கு அருகாமையில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், போலீஸ் நிலையம், குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தூர் நாற்றம் வீசுவதால் அவ்வழியே மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.