7 April 2024 5:42 PM GMT
#45850
நோய் பரவும் அபாயம்
பீமநகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகில் கோவில் இடத்தில் தனி நபர் ஒருவர் காளை மாடுகளை கட்டி வைப்பதுடன், ஆடுகள், குருவிகள், பறவைகள், நாய்கள் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். இவற்றின் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டு வருவதினால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.