18 Feb 2024 10:53 AM GMT
#44496
கிளை வாய்க்கால்கள் அமைக்கப்படுமா?
அருத்தோடிப்பட்டி
தெரிவித்தவர்: மு. சேக் பகுர்தீன்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, அருத்தோடிப்பட்டி கிராமத்தில் உளவயல் வாய்க்காலில் இருந்து பாசனத்திற்காக செல்லக் கூடிய பாசன வாய்க்கால்களில் கிளை வாய்க்கால்கள் இல்லாததால் நீர் பாசனம் கிடைக்காமல் விவசாயிகள் பலரும் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. கிளை வாய்க்கால்கள் அமைத்து கொடுத்து விவசாயிகளுக்கு நீர் பாசனம் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.