3 Dec 2023 5:48 PM GMT
#42701
பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு
தியாகதுருகம்
தெரிவித்தவர்: பொது மக்கள்
தியாகதுருகம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை இருப்பது பயணிகளுக்கு தெரியாத வகையில் அங்கு ஆக்கிரமிப்பு செய்து தள்ளுவண்டிகள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு பஸ்சுக்காக சாலையில் காத்திருக்கும் பயணிகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.