புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடைகள் அகற்றப்படுமா?
ஆவுடையார்கோவில், கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள ஆவுடையார்கோவில் சாலை மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம், பாலிடெக்னிக் கல்லூரி, கலைக்கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலையில் உள்ள அக்னிபஜார் முக்கிய கடை வீதியாக உள்ளது. இந்த பகுதிகளில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அக்னிபஜாரில் 6 வேகத்தடைகள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸில் செல்லக்கூடிய நோயாளிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல காலதாமதம் ஆகிறது. எனவே தேவையற்ற இடங்களில் உள்ள வேதத்தடைகளை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.