- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய கட்டிடம் கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை
கரூர் மாவட்டம், புன்னம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புன்னம்சத்திரத்தில் இருந்து காகித ஆலை செல்லும் பிரிவு சாலை எதிரே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் ஏராளமான விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் இருந்து விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன், பொதுமக்களுக்கு நகை கடன் மற்றும் பல்வேறு கடன்கள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பொதுமக்களின் நகைகள், விவசாயிகள் மற்றும் மகளிர் குழுவினரின் ஆவணங்கள் உள்ளிட்டவை அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாடியில் உள்ள ஒரு அறையில் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருவதால் அங்கு பாதுகாப்பான நிலை இல்லை என்றும், அதற்காக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து புன்னம் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.