- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம்
கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் 1962-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இப்பள்ளி கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பயின்று வந்தனர். பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆனதனால் வகுப்பறைக்குள் ஆங்காங்கே கட்டிட காங்கிரீட்டுகள் பெயர்ந்து விழுந்தது. கடந்த சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு சுமார் 2 வருடம் ஆகியும் இதுவரை பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு சொந்தமான 2 சமுதாய கூடத்தை பள்ளிக்கூடமாக மாற்றி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். எனவே கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுத்து ஏழை மாணவ- மாணவிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.