19 April 2023 2:16 PM GMT
#31173
பயன்பாட்டிற்கு வருமா?
திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
மன்னார்குடி முத்துபேட்டை சாலையில் காட்டூர் ஊராட்சி எலவனூர் பகுதியில் கிராம ஊராட்சி சேவை மையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சேவைகள் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பல மைல் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேவைமையத்தை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எலவனூர்