12 April 2023 11:40 AM GMT
#30699
பயன்பாட்டிற்கு வருமா?
திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அது தற்போது செயல்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர். கர்ப்பிணிபெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாடிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்