- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தாசில்தார் அலுவலகம் கட்டப்படுமா?
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 11 வட்டங்கள் உள்ளன. இதில் கிழக்கு தொடர்ச்சி மலையை சேர்ந்த பச்சை மலையை உள்ளடக்கிய வருவாய் கிராமங்களுடன் சேர்த்து மொத்தம் 67 கிராமங்களுக்கு துறையூர் தாலுகாவாக செயல்பட்டு வருகிறது. அப்போது இருந்த மக்கள் தொகையை கணக்கிட்டு கடந்த 1970-ம் ஆண்டு தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டது. 52 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போதைய தாசில்தார் அலுவலகம் போதிய இட வசதி இன்மை காரணமாகவும், அதிகளவு பொதுமக்கள் வந்து செல்வதால் சிரமம் ஏற்படுவதாகவும் இருக்கிறது. பழைய கட்டிடக்கலை அடிப்படையில் கட்டப்பட்ட இந்த தாசில்தார் அலுவலகத்தில் திடீரென மழை பெய்தால் அலுவலகம் உள்ளே மழைநீர் சொட்டும் அளவிற்கு உள்ளது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதில் பொதுமக்கள் தங்கு தடையின்றி வந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே 50 ஆண்டுகள் நிறைவடைந்த கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக தாசில்தார் அலுவலகம் கட்டிக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.