- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அனுமதி பெறாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கரூர் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சி மற்றும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியின் அனுமதி பெறாமல், கட்டிட வரைவு படம் ஒப்புதல் இல்லாமல் ஏராளமான வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். அதை வாங்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீடுகளை வாங்கிய பிறகு கட்டிட அளவு குறித்த வரைபடங்கள் தயார் செய்து அதற்குப் பிறகு கட்டிய கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிகளின்படி கட்டிடம் கட்டுவதற்கு முன்( ப்ளூ பிரிண்ட்) வீட்டு கட்டிடத்தின் அளவு, அறைகளின் அளவு குறித்த வரைபடம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட பிறகு அதிகாரியின் ஒப்புதல் பெறப்பட்டு அந்த வீட்டின் அளவு எத்தனை சதுர அடி உள்ளதோ அதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பணம் கட்டி ரசீது பெற்ற பிறகு வீடுகள் கட்ட வேண்டும் என்பது விதி உள்ளது. ஆனால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் எந்த அனுமதியும் பெறாமல் வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகின்றனர். வீடுகளை விற்பனை செய்யும் போது அனைத்து அனுமதியும் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். வீடுகளை வாங்குவோர் உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்புகள் ,பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள வீடுகள் மீது புதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




