13 March 2022 12:50 PM GMT
#123
பராமரிப்பின்றி கிடக்கும் கழிப்பறை
ஆவடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகத்துக்கு அருகே இருக்கும் பொது கழிப்பறை பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கழிப்பறைக்கு வெளியிலேயே இயற்கை உபாதையை கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடுக்கு வழி வகுக்கிறது. எனவே கழிப்பறையை முறையாக பராமரிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.