பந்தலூரில் இருந்து கூவமூலா செல்லும் சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ஆறு போல் ஓடுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. மழைக்காலம் என்றாலும் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இங்கு குழாய் உடைந்து குடிநீர் வீணாவது காண்போரை வேதனையடைய செய்கிறது. எனவே உடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.