கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-10-27 07:22 GMT

 இரணியல் மார்த்தாண்டேஸ்வரர் கோவில் அருகே பின்பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகின்றது. இங்கு விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக வள்ளியாற்று தண்ணீரும், மழைநீரும் பாய்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மழை காலங்களில் விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீரும் இந்த கால்வாய் வழியாக வடிந்து சென்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கால்வாயை முறையாக பராமரிக்காததால் மண் நிரம்பி அடைபட்டு தண்ணீர் வடிந்தோட முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தென்னை மரங்கள் அழியும் நிலையில் காணப்படுகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரி விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

-அரவிந்த், இரணியல்.

மேலும் செய்திகள்