கண்டாச்சிபுரத்தில் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையோரத்தில் இடுகாடு உள்ளது. இங்கு இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய செல்லும் பொதுமக்கள், உறவினர்கள் குளிப்பதற்காக தண்ணீர் வசதி இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு தொட்டியுடன் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.