மீனச்சல் பகுதியில் பாதிரிகுளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீரை பல ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் குளிப்பதற்கும், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளத்தை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.