கோத்தகிரி நீர் உந்து நிலையம் அருகே குடிநீர் திறந்து விடும் வால்வு பழுதாகி உள்ளது. இதன் காரணமாக அந்த வால்வு வழியாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இது காண்போரை வேதனை அடைய செய்கிறது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், இப்படி வீணாக்கலாமா என்று அவர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். எனவே அங்கு குடிநீர் விணாவதை தடுக்க வால்வை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.