கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் உள்ளது. அதில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் வீணாவதை தடுக்கும் வகையில் பழுதடைந்த குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.