கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நாடார் சங்க திருமண மண்டபம் எதிரே குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மீது வாகனங்கள் தண்ணீரை தெளித்து செல்கிறது. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் வீணாவதை தடுக்க குழாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.