பிரம்மதேசம் அருகே வைடபாக்கம் ஏரி முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் தூர்ந்துபோய் கிடக்கிறது. மேலும் சிலர் ஏரியை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவு தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருவதால் அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க ஏரி ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.