இனயம் பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.