குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு

Update: 2024-01-14 12:20 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் பரம்பூர் ஊராட்சி பின்னங்குடியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்து சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்