கோத்தகிரியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல பிளாஸ்டிக் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குழாய்களில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே அந்த உடைப்புகளை சரி செய்வதோடு தொடர்ந்து குடிநீர் வீணாவதை தடுக்க இரும்பு குழாய்கள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.