புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி தேரோடும் திருவள்ளுவர் சாலை மூன்று சாலை சந்திப்பில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி வருகிறது. மேலும் இந்த நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.