புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு பெரியகடை வீதி அருகே 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்கத்தொட்டி உள்ளது. இந்த நீர் தேக்கத்தொட்டியின் பக்கவாட்டு சுவர்கள் மற்றும் தூண்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இவைகள் மேலும் சேதமடையும் முன்பு இவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.