புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு அருகேயுள்ள அணவயல் நெடுஞ்சாலை பகுதியில் இருந்து ஜீவா நகர் செல்லும் வழியில் உள்ள காவேரி கூட்டு குடிநீர் குழாய் செல்லும் தொட்டி தரையோடு தரையாக உள்ளது. இந்த தொட்டியின் மூடிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை அனைவரும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டி மூடிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.