சேதமடைந்த சிமெண்டு பூச்சுகள்

Update: 2023-07-09 18:04 GMT
திருக்கோவிலூர் தாலுகா அரியூர் ஊராட்சி மதுரா வடியாங்குப்பம் கிராமத்தில் மினி குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியின் கீழ் இருக்கும் சிமெண்டு பூச்சுகள் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் பிடிக்க வரும் பொதுமக்கள் அதில் தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்